இயேசுவின் இரத்தம் ஜெயமே
yesuvin iratham jeyamae
இயேசுவின் இரத்தம் ஜெயமே தூய இரத்தத்தால் வெற்றி வெற்றியே இயேசு இரத்தத்தால் சாத்தான் வீழ்ந்தான்
1. பாவத்தில் வாழ்ந்த காலத்தில் நிம்மதி அற்ற வேளையில் என்னை அழைத்தீர் உம்மை அண்டினேன் உந்தன் இரத்தத்தால் என்னை கழுவினீர்
2. வேதனை நிறைந்த நேரத்தில் ஆபத்தில் பயந்த வேளையில் உம்மை கூப்பிட்டேன் என்னருகில் வந்தீர் உந்தன் இரத்தத்தால் என்னை மூடினீர்
3. சோதனை சூழ்ந்த நேரத்தில் சேற்றினில் மூழ்கும் வேளையில் உந்தன் கரத்தை என் மேல் வைத்தீர் உந்தன் இரத்தத்தால் என்னை மூடினீர்