யேசுவின் இன்ப நாமத்தை
yesuvin inba naamathai
1. யேசுவின் இன்ப நாமத்தை எல்லாரும் போற்றுங்கள். விண்ணோர்கள் போல அவரை - நீர் வாழ்க! (4) என்னுங்கள்.
2. பிசாசினின்று மாந்தரை மீட்டோரைப் போற்றுங்கள். ஒப்பற்ற நேசர் அவரை - நீர் வாழ்க! (4) என்னுங்கள்.
3. எல்லாரும் அருள் நாதரை மகிழ்ந்து போற்றுங்கள். ஜீவாதிபதி அவரை - நீர் வாழ்க! (4) என்னுங்கள்.
4. அவரைப் பார்க்கும் பொழுது ஓயாமல் போற்றுவோம். நம் மீட்பர் பாதம் பணிந்து - நீர் வாழ்க! (4) என்னுங்கள்.