யேசுவண்டை சேரில் பூரிப்பாக்குவார்
yesuvandai seril poorippaakkuvaar
1. யேசுவண்டை சேரில் பூரிப்பாக்குவார் நெஞ்சின் தீரா நோவும் ஆறப் பண்ணுவார்.
யேசுவண்டை சேரில் பூரிப்பாக்குவார் "வாரும் சிறியோரே வாரும்" என்கிறார்.
2. யேசுவண்டை சேரில் ஏற்றுக் கொள்ளுவார் எந்தன் பாவம் நீக்கி மீட்டு ரட்சித்தார்.
3. யேசுவண்டை சேரில் கையில் ஏந்துவார் பாதுகாத்து பின்பு மோட்சம் கொடுப்பார்.
4. வெள்ளை அங்கி போட்டுக்கொண்டு வாழுவேன் மீட்பரின் சமூகம் கண்டு களிப்பேன்.