இயேசுவைப்போல சகாயஞ்
yesuvaippola sagaayagn
இயேசுவைப்போல சகாயஞ்செய்வார் இல்லையே இல்லையே ஆத்மாவின் ரோகமும் நோவும் தீர்ப்பார் இல்லையே இல்லையே
இன்பவாரி இயேசு நாதா அன்பரில் நீர் பேரன்பரே நல்லோரும் வல்லோரும் உம்மைப்போல இல்லையே இல்லையே
மீட்பரைப் போல்மாசில்லாதோர் மேலோர் இல்லையே இல்லையே கிறிஸ்துவைப்போல் மனத்தாழ்மையுள்ளோர் இல்லையே இல்லையே
இயேசுவினாலே வராத இன்பம் இல்லையே இல்லையே ஆண்டவர் நீக்கமாட்டாத துன்பம் இல்லையே இல்லையே
நாதர் கைவிட்ட மெய்பக்தர் உண்டோ இல்லையே இல்லையே மீட்கப்படாத மா பாவி உண்டோ இல்லையே இல்லையே