யேசுவைப்போல் நல்ல நேசர் உண்டோ
yesuvaippol nalla nesar undo
1. யேசுவைப்போல் நல்ல நேசர் உண்டோ? இல்லையே இல்லையே. ஆத்தும நோய் தீர்க்கும் வைத்யர் உண்டோ? இல்லையே இல்லையே. யேசு நேசர் அறிவார் என்னை என்றும் என்னோடிருப்பாரே.
யேசுவைப்போல் நல்ல நேசர் உண்டோ? இல்லையே இல்லையே.
2. யேசையர் மேன்மைக்கோர் நிகர் உண்டோ? இல்லையே இல்லையே. ராஜரின் தாழ்மைக்கோர் ஒப்புமுண்டோ இல்லையே இல்லையே. யேசு நேசர் அறிவார் என்னை என்றும் என்னோடிருப்பாரே.
3. எப்பொழுதாயினும் கை விட்டாரோ? இல்லையே இல்லையே. கார் இருளில் அவர் நீங்குவாரோ? இல்லையே இல்லையே. யேசு நேசர் அறிவார் என்னை என்றும் என்னோடிருப்பாரே.
4. யாரும் அவரில் ஏமாந்ததுண்டோ? இல்லையே இல்லையே. எப்பாவியும் தள்ளப்பட்ட துண்டோ? இல்லையே இல்லையே. யேசு நேசர் அறிவார் என்னை என்றும் என்னோடிருப்பாரே.
5. யேசுவைப் போல் மீட்பர் எங்கும் இல்லை இல்லையே இல்லையே. அன்பரில் அன்பர் வேறாரும் இல்லை இல்லையே இல்லையே. யேசு நேசர் அறிவார் என்னை என்றும் என்னோடிருப்பாரே.