இயேசுவைப் போல நாம் மாறுவோம்
yesuvaip pola naam maaruvom
இயேசுவைப் போல நாம் மாறுவோம் இவ்வுலகத்தின் இருள் நீக்குவோம் இயேசுவின் பாதையில் தினமும் நடப்போம் இயேசுவைப் போல வாழுவோம் - அல்லேலூயா
நமக்கொரு மாதிரி பின்வைத்தார் நாம் நடந்திடப் பாதை வகுத்தார் அவரது அடிகளைத் தொடர்ந்தே செல்வோம் அவரை முழுவதும் பின்பற்றுவோம்
காலையில் இருட்டோடெழுவோம் கால்களில் வீழ்ந்திடுவோம் செடியுடன் கொடியென நிலைத்தே இருப்போம் சீடர்களாக நாம் கனி கொடுப்போம்
ஒருவரிலொருவர் அன்புடன் - நாம் ஒருமித்துச் செயல்படுவோம் கிறிஸ்துவின் சபை தன் நிறைவை அடைய கிறிஸ்துவுக்குள் நாம் வளர்ந்திடுவோம்
சாந்தம் தாழ்மையைத் தரிப்போம் முழு சத்தியத்தை எடுத்துரைப்போம் சாலைகள் தோறும் வீடுகள் தோறும் சிலுவை சுமந்தே சாட்சி சொல்லுவோம்
குருடரின் கண்களைத் திறப்போம் சுத்த சுவிசேஷம் எடுத்துரைப்போம் குறைகளை நீக்கும் பணியினை ஏற்போம் கிறிஸ்துவின் பாடுகளை நிறைவேற்றுவோம்