யேசுவைப் பார்த்து நட என் நேசா
yesuvaip paarthu nada en nesaa
யேசுவைப் பார்த்து நட என் நேசா யேசுவைப் பார்த்து நட.
1. நமது பாவங்களுக்காக மரித்து - நாம் நடந்திட வழிகாட்டி முன்சென்ற
2. தீமைக்குத் தீமை செய்தாரோ? - தமைச் சிலுவையிலறைந் தோர்க்காய் ஜெபித்தாரே
3. சண்டை கூக்குரல் செய்யாரே - தம் சத்தத்தை வீதியில் காட்டாரே.
4. நெரிந்த நாணலை முறியாரே - மங்கி எரிந்த திரியை அவியாரே.
5. பாடுபடுகையில் பயமுறுத்தலையே அவர் பயங்கரச் சாபங்கள் தான் இடவில்லையே
6. உருக்க இரக்கங்கள் உள்ளாரே அவர் செவிடு குருடூமையைத் தள்ளாரே.
7. நன்மை செய்வதிலவர் ஓய்ந்ததுமில்லை அவர் நாட்களை வீணில் கழித்ததுமில்லை.
8. பரிசுத்த மார்க்கம் காட்டினாரே - கெட்ட பாவ சோதனைகளை வென்றனரே