இயேசுவைப் பாடுவோம்
yesuvaip paaduvom
இயேசுவைப் பாடுவோம் இனிதாய் பாடுவோம் எண்ணில்லா நன்மைகள் செய்வதால் பாடுவோம் போஷிப்பதால் பாடுவோம் நேசிப்பதால் பாடுவோம் சுவாசிப்பதால் பாடுவோம் சுக ராகம் பாடுவோம்
1. கீழாக்காமல் மேலாக்குவேன் என்பதாலே பாடுவோம் வாலாக்காமல் தலையாக்குவேன் என்பதாலே பாடுவோம் நன்றி சொல்லிப் பாடுவோம் நாவலிக்கப் பாடுவோம் நடனமாடி பாடுவோம் நாள் முழுக்க பாடுவோம்
2. பாவங்களை மன்னிப்பதால் மகிழ்வுடனே பாடுவோம் வியாதிகளை விலகுவதால் வீறுகொண்டு பாடுவோம் அல்லேலூயா பாடுவோம் ஆனந்தமாய் பாடுவோம் துதி கீதம் பாடுவோம் ஸ்தோத்திரம் பாடுவோம்
3. சீக்கிரமாய் வருவேனென்று சொன்னவரை பாடுவோம் ஆம் கர்த்தாவே வாருமென்று சொல்லிச் சொல்லிப் பாடுவோம் வந்ததாலே பாடுவோம் வருவதாலே பாடுவோம் வானவரைப் பாடுவோம் வாழ்த்திப் பாடுவோம்