இயேசுவை வெளிப்படுத்த
yesuvai velippadutha
இயேசுவை வெளிப்படுத்த எனக்கு ஆசை -அதுக்கு இயேசுவோடே நடக்க எனக்கு ஆசை
உம்மை போல் மாறுவேன் உமக்காக வாழ்வேன்
1.அதிகாலை அவரோடு பேச ஆசை- அதுக்கு அதிகாலமே எழும்ப எனக்கு ஆசை அவரோடு ஆவலோடு பேச ஆசை அனுதினமும் அதுவாகவே இருந்திட ஆசை
2.ஒழுங்காக ஆராதனைக்கு வந்திட ஆசை ஒழுங்கீன ஜீவியமெல்லாம் ஒழிந்திட ஆசை சரியான நேரத்துக்கு வந்திட ஆசை சபையான சங்கத்திலே நிலைத்திட ஆசை
3.போதகரின் சொல்லைக் கேட்டு வளர்ந்திட ஆசை போதும் என்ற மனதுடனே இருந்திட ஆசை வார்த்தைக்கு வார்த்தை பேசாமல் வளர்ந்திட ஆசை வாழ்க்கையே இப்படியெல்லாம் வாழ்ந்திட ஆசை
4.சொல்லைக் கேட்டு பல்லை கடிக்காமல் இருந்திட ஆசை சொல்லையே தலைக்கல்லாய் நான் வைத்திட ஆசை வார்த்தை என்னை குட்டிட என் தலை கொடுத்திட ஆசை என் தலையை எண்ணெயால் நான் வார்த்திட ஆசை
5.விட்டுக்கொடுக்கும் இருதயமாய் நான் இருந்திட ஆசை கெட்டுப்போகாமல் என்னை பார்த்திட ஆசை கொட்டிக்கிடக்கும் தேவ வார்த்தையை எடுத்திட ஆசை கெட்டிக்காரன் என்றே வாழ்ந்திட ஆசை
6.கொடுக்கும் நேரம் கெடுத்துக்கொள்ளாமல் இருந்திட ஆசை கொடுப்பதே பாக்கியம் என்பதை அறிந்திட ஆசை விதவையின் காணிக்கையை கொஞ்சம் நினைத்திட ஆசை விதவையின் மனநிலையில் நான் வந்திட ஆசை
7.இரவும் பகலும் வேதத்தை நான் வாசிக்க ஆசை இரவெல்லாம் கண்விழித்து நான் ஜெபித்திட ஆசை வாசிக்கும் நிருபமாகவே வாழ்ந்திட ஆசை போதிக்கும் சத்தியங்களால் நான் போஷிக்க ஆசை
8.முடிவு வரை பெற்ற இரட்சிப்பில் நிலைத்திட ஆசை இரட்சிப்பையே முடிவாய் முடிசூட்டி ஆசை அழியாத ஜீவகீரிடத்தை பெற்றிட ஆசை-அதுக்கு ஒழியாத தேவ அன்பிலே நிலைத்திட ஆசை
More from Yesappave Ummai Therinthatharku
- அண்ணாந்து பாத்தா விண்மீனுannaandhu paathaa vinmeenuPr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku
- அதிகாலை நேரத்துல ஆண்டவரைத்adhigaalai nerathula aandavaraithPr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku
- அதிகாலை நேரம் ஆண்டவரே உம் பாதம்adhigaalai neram aandavarae um paadhamPr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku
- அதோ அந்த மேகம் என்ன அழகுadho andha megam enna azhaguPr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku
- அநேகமாயிரம் பொன்anegamaayiram ponPr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku
- அன்பான போதகரேanbaana podhagaraePr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku
- அன்பு நீடிய சாந்தமும் தயவுமுள்ளதுanbu neediya saandhamum thayavumulladhuPr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku
- அப்பா பிதாவே அப்பா பிதாவேappaa pidhaavae appaa pidhaavaePr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku