இயேசுவை நோக்கி பார்த்திடுவோம்
yesuvai nokki paarthiduvom
இயேசுவை நோக்கி பார்த்திடுவோம் அவரையே கண்முன் நிறுத்திடுவோம் அவர் செயல்களுக்காய் பாடிடுவோம் அவர் நினைவாக வாழ்ந்திடுவோம் ஆமென் அல்லேலூயா – 4
1. நம் கால் இடற விடமாட்டார் நம்மைக் காப்பவர் உறங்க மாட்டார் நம் தேவன் அவரோ அயர்வதில்லை நம் நினைவாக வாழ்கின்றார்
2. போகும் போதும் காக்கின்றார் திரும்பும் போதும் காக்கின்றார் இப்போதும் எப்போதும் காக்கின்றார் இனியும் நமக்கு பயமேது
3. நம்துன்பம் கண்டு கலங்குகிறார் நமக்காய் கண்ணீர் வடிக்கின்றார் நம்பாவம் அனைத்தும் சுமந்து கொண்டு நமக்காய் பரிந்து பேசுகின்றார்