இயேசுவை நான் நம்பி ஜீவியம்
yesuvai naan nambi jeeviyam
1. இயேசுவை நான் நம்பி ஜீவியம் செய்வேன் இயேசு தான் என் தஞ்சம் வானிலும் பூவிலும்
2. பூமியின் காரங்கள் யாதொன்றெனக்கில்லை போக்கிட மாகுவோன் என் இயேசு தானல்லோ
3. இராப் பகல் அன்பர்தம் கண்மணி போல் என்னை காப்பதற்காக தூங்கிடேன் என்கிறார்
4. சாத்தானும் சேனையும் சண்டை செய்திடினும் சாவை வென்று யிர்த்தோனால் ஜெயக்கொடி நாட்டுவேன்
5. பூலோக மாயையில் நான் வீழ்ந்துவிடாமல் மேலாக காட்சி என் கண்களில் வீசுதே
6. பாவம் பெருகுதே லோகம் உயருது நீதியின் சூரியன் மங்கியெரியும்
7. ஒவ்வொருவரும் தம் தம் காரியம் நோக்கவே இயேசுவின் காரியம் தேடிடார் யாரும்
8. மார்க்கம் தப்பிச் செல்லும் மானிடரை எல்லாம் வழிப்படுத்துவதில் என் வாணாளை போக்குவேன்