இயேசுவை முழுமனதாலே
yesuvai muzhumanadhaalae
இயேசுவை முழுமனதாலே சேவை செய்வேன் என் நேசர் அன்பாலே,
தேடி என் பாவங்கள் காணவும் அரிதே, தேவகுமாரன் தம் தோள் அதன் மீது, நேசமுடன் சுமந்தளித்தாரே.
1. காரிருள் மூடின வேளை, கருணையின் கதிர்கள் வீசினாலே, பாருலகதிலே பகைவரின் எதிரே மாளவிடாதே மகிமையாலே பாலகர் எமையே அலங்கரித்தாரே
2. கனிவுடன் கரம் அளித்தாரே. மாநிலமீதே மகிழ்ந்தழைத்தாரே தனிமை என்றுணரத் தாமே விடாது. வலிமை அளித்து, வழியில் முன் நடந்து. தாங்கினாரே சாய்ந்து விடாது.
3. அற்புதம் அவரது நேசம்! உற்றதில்லை இங்கிவ்வித பாசம். சுற்றிலும் சத்துரு சூழ்ந்து எழும்ப, முற்றிலும் முறித்திடப் பலமுறை முயல, உற்றவர் அன்பாய் முன்னின்று பேச
4. இயேசு என் சகலமும் உலகில் தேக சுகம் பேசிடும் பெலமும் ஏக துணையும், ஏழையின் அணையும் மேகங்கள் போன்ற துன்பத்தில் அரணும், சோரும் வேளை சாரும் பர்வதம்.
5. புண்ணியனைப் புகழ்வேனே, புவிதனில் அவர் பேரன்பினாலே, பூதல மீதில் புதைத்திடாமல் நான் சுவிசேஷம் அதைக் கூறிடுவேனே தூயனைப் பாடித் துதித்திடுவேனே.