இயேசுவே உம்மைப்போல் ஆக
yesuvae ummaippol aaga
இயேசுவே உம்மைப்போல் ஆக வாஞ்சிக்குதே என் உள்ளம் என் ஆவி ஆத்மா சரீரம் முற்றும் படைத்து விட்டேன் என்னை ஏற்றுக்கொள்ளும் ஐயனே
1. பாவமறியாது பாவமே செய்யாது பாரினில் ஜீவித்தீரே பரிசுத்தர் உம்மைப் போல ஜீவிக்கவே பெலமதை தாருமையா பெலமதை தாருமையா– உந்தன்
2. உபத்திரவம் உண்டு உலகினில் என்று உலகத்தை வென்றேனென்றீர் உம்மைப்போல உலகினை ஜெயித்திடவே பெலமதை தாருமையா பெலமதை தாருமையா– உந்தன்
3. சிலுவை சுமந்தென்றும் என் பின் வராதவன் அல்ல என் சீஷன் என்றீர் எந்தன் சிலுவையை நான் சுமக்க பெலமதை தாருமையா பெலமதை தாருமையா– உந்தன்
4. சீயோன் மலையதில் சிறந்தே இலங்கிடும் தேவாட்டுக்குட்டி நீரே சீயோனில் உம்முடன் நானிருக்க உம்மை போல் மாற்றும் ஐயா – என்னை உம்மை போல் மாற்றும் ஐயா
5.தலை சாய்க்கத் தலமில்லை தரணியில் உறவில்லை நிலையில்லா பூவில் என்றீர் நானும் உம்மைப் போல தியாகம் செய்ய பெலமதைத் தாருமையா - உந்தன்
Chords
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
Cm Eb Cm Bb Cm Cm F G Cm Cm Bb Cm Cm Eb G Cm Cm G G# Eb Cm Cm Bb Cm Cm Eb G Cm Cm G G# Eb Cm Cm Bb Cm Cm Eb G Cm Cm G G# Eb Cm Cm Bb Cm Cm Eb G Cm Cm G G# Eb Cm Cm Bb Cm