இயேசுவே உம்மைப் போல
yesuvae ummaip pola
இயேசுவே உம்மைப் போல நல்ல தெய்வம் இல்லையே இயேசுவே உம்மைப் போல வல்ல தெய்வம் இல்லையே – 2
1. உம்மைப் போல் என்னைக் காத்திட ஒருவரில்லை உம்மைப் போல் என்னை தாங்கிட யாருமில்லை நீர்தான் என் துணையாளரே நீர்தான் என் மணவாளரே – 2
2. உம்மைப் போல் என்னை நடத்திட ஒருவரில்லை உம்மைப் போல் என்னைத் தேற்றிட யாருமில்லை நீர்தான் என் நல்மேய்ப்பரே நீர்தான் என் எஜமானரே – 2
3. உம்மைப் போல் என்னை நேசிக்க ஒருவரில்லை உம்மைப் போல் என்னை அணைத்திட யாருமில்லை நீர்தான் என் நல்நேசரே நீர்தான் என் நல்நண்பரே – 2