இயேசுவே உம்மை போல
yesuvae ummai pola
இயேசுவே உம்மை போல தேவன் வேற யாருமில்லை ராஜா பாவி என் இதயத்தின் ராஜா கண்ணீரை துடைக்கின்ற காயங்கள் ஆற்றுகின்ற எந்நாளும் நீர் எங்கள் ராஜா - 2
எந்தன் நல்ல மேய்ப்பரும் நீரே உம்மை தொழும் ஆட்டுக்குட்டி நானே விண்ணைத்தாண்டி வந்தவர் நீரே என்னை கொண்டு சென்றிடுவீர் - 2
எந்நாளும் உம்மோடு ஆடுவேன் எந்நாளும் உம்மை நான் பாடுவேன் - 2
நன்றி சொல்லி நன்றி சொல்லி நன்றி சொல்லி ராஜன் போற்றுக - 2
பாதை மாறி தவறிய போது பாதை காட்ட வந்தவர் நீரே பாசத்துக்காய் ஏங்கிய போதும் பாசம் காட்டி அணைத்தவர் நீரே - 2
பல்லவி
என்னை மீட்டினீர் நன்றி அய்யா பாதுகாத்தீரே நன்றி அய்யா பிள்ளை என்றீர் அய்யா அணைத்துக் கொண்டீர் - 2
மனிதர் என்னை மறந்திட்ட போதும் மறவாத நேசர் நீரே மாரா போல கசந்த என்னை மதுரமாக மாற்றிவிட்டீரே - 2
பல்லவி
என்னை மீட்டினீர் நன்றி அய்யா பாதுகாத்தீரே நன்றி அய்யா பிள்ளை என்றீர் அய்யா அணைத்துக் கொண்டீர் - 2
Chords
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
D Bm G A D D Bm G A D D G A D G A D A G D D A G A D D G A D D G A D D A A G A D A G D D G A D D G A D D A A G A D A G D