இயேசுவே உம்மை காணாமல்
yesuvae ummai kaanaamal
இயேசுவே உம்மை காணாமல் கண்கள் உறங்காது உந்தன் பேரைச் சொல்லாமல் உள்ளம் உறங்காது கடலில் சென்று சேராமல் நதியும் அடங்காது
இறைவா உம்மைச் சேராமல் இமைகள் உறங்காது மேய்ப்பன் நீரும் இல்லாமல் மேன்மை வாராது
2. இயேசுவே உம்மைக் கண்டதினால் இன்னும் இருக்கின்றோம் இருளில் அழுத கண்ணீரால் இங்கு இருக்கின்றோம் நீங்கள் போன வழி பார்த்து உம்மை தொடர்கின்றோம்
மீண்டும் வருவேன் என்றதால் காத்து இருக்கின்றோம் உம்மைத் தேடி எல்லோரும் சிலுவை சுமக்கின்றோம்
3. மந்தைகள் பாடும் சோகங்கள் காதில் விழ வேண்டும் நல்ல மேய்ப்பன் நீரன்றோ இன்றே வர வேண்டும் உம்மை கண்டு மண் மீது உயிர்கள் தொழ வேண்டும்
வார்த்தை ஏதும் பேசாமல் கண்கள் அழ வேண்டும் தேவ மைந்தன் பாதத்தில் கண்ணீர் விட வேண்டும்