இயேசுவே உம்பாதம்
yesuvae umbaadham
இயேசுவே உம்பாதம் தொழுகின்றேன் - (3)
1.மாசற்ற அன்பினாலே இயேசுவே என்னையும் நீர் உம் பிள்ளையாக்கவே தீமைகள் மாற்றவே விண் மகிமையை விட்டீர் அல்லேலூயா ஆமென் - அல்லேலூயா
2.நேசத்தின் ஆழிதனில் மூழ்கி நான் இன்று பாரில் பாரங்கள் நீங்கி ஆனந்தம் பொங்கி வாழுவேன் என்றென்றுமாய் அல்லேலூயா ஆமென் - அல்லேலூயா
3.என்றுமே நான் உலகில் உந்தனின் சொந்தமல்லோ ஒன்றுமே இவ்வன்பை மாற்றிடலாகாதே ஆ! என்ன பாக்கியமிது அல்லேலூயா ஆமென் - அல்லேலூயா
4.பூமியும் வெந்துருகும் வானமும் மறைந்திடும் ஆயினும் இயேசுவின் அன்புக்கரங்களில் சாய்ந்திளைப்பாறிடுவேன் அல்லேலூயா ஆமென் அல்லேலூயா