இயேசுவே உம் திருப்பாதத்தில்
yesuvae um thiruppaadhathil
இயேசுவே உம் திருப்பாதத்தில் தஞ்சமே என்று நான் சரணடைந்தேன் ! பொன்னும் வெள்ளியும் இல்லையே வாழ்வைத் தந்த வள்ளலே என்னைத் தருகின்றேன் - 2 ஏற்றுக் கொள்ளுமே உமதாக்குமே உம்திரு புகழ்பாடும் கருவியாக்குமே பாவம் போக்கி புனிதமாக்கி பரிசுத்த கூட்டத்தோடு சேர்த்துக் கொள்ளுமே
இறைவனின் அரசு மலர்ந்திட இயேசுவே பலியாகும் புனித வேள்வியிலே என்னையும் இணைத்து புது உலகம் படைத்து சமர்ப்பணம் ஆகினேன் ஆண்டவரே ஏற்றுக் கொள்ளுமே . . .
எளியவர் வாழ்வினில் உயர்ந்திட என்றும் உமது திருப்புகழ் புவியில் மலர்ந்திட - 2 எனது சிந்தனை சொல் செயல் அனைத்தும் சமர்ப்பணம் ஆக்கினேன் ஆண்டவரே ஏற்றுக் கொள்ளுமே