இயேசுவே உம் அளவில்லா
yesuvae um alavillaa
இயேசுவே உம் அளவில்லா கிருபை என்னை நாள்தோறும் நடத்திடுதே
1. கிருபை பெற்றாய் நீ வாழ்க என்றுரைத்தீரே நம்பி வந்தேன் உந்தன் கிருபையால் சூழ்ந்தீரே மலைகள் விலகி போய்விடும் மன்னவா! மாறாத உம் கிருபை - இயேசுவே
2. யாக்கோபின் தேவனே! நீர் எந்தன் துணையே யாரும் இல்லை உம்மை போல இவ்வுலகில் நாசா உலகம் என்னை தள்ளிட்டாலும் நாதன் நீர் மாத்திரம் என் சந்தோஷம் - இயேசுவே
3. தேவரீர் எழும்புடுவீர் வல்லமையின் சிதறிய ஓடுமே சத்துரு சேனைகள் ஜெயம் ஜெயம் என்று ஆர்ப்பரித்து ஜெயத்தின் நாதனைக் கொண்டாடுவேன் - இயேசுவே
4. நேசா! நீர் சகலமும் நன்மைக்காக செய்வீர் சந்தோஷமாய் உந்தன் அடிகளை தொடருவேன் வி ண்ணில் நீர் ஆயத்தம் செய்து மேன்மை நாவினால் வர்ணிக்க கூடாதவை - இயேசுவே
5. பரனே! நான் என்று உம்மைக் கண்டு களிப்பேன் பாரில் என் ஆசையும் சிந்தையும் அதுவே பரலோக கானானை அடைந்து உந்தன் பொன்முகம் காணுவேன் கிருபைனால் - இயேசுவே