இயேசுவே கருணாகரா
yesuvae karunaagaraa
இயேசுவே கருணாகரா நின் ஆசி கூறும் - இந்நேரம்
1. தாசர்கள் ஆறுதலே தாழ்மையுள்ளோர் தாரகமே தாவி வந்தது பாதம் பணிந்தோம் தயாபரா கிருபை தாரும் - இயேசு
2. தேசமெல்லாம் புலம்பிடுதே - நாசமெங்கும் பரம்பிடுதே நேசரேயும் பாசகரத்தை நீட்டி எம்மை ஆதரிப்பீர் - இயேசு
3. ஆதி அன்பு குறைந்தோரெல்லாம் ஆவலாய் முன்னேறிச் ஆவி மழை யூற்றிடுமிப்போ அன்பிலே நிறைந்து மகிழ் - இயேசு
4. விசுவாச துரோகமெங்கும் வேகமாக தோன்றிடுதே வேதனை மெய் விசுவாச போங்க வேண்டும் ஞானத்தினாவி - இயேசு
5. வாக்கு மாறா தேவா வரும் வல்லமையால் நிறைக்கவே நீரும் வெல்லவே பொல்லாத பிசாசை வீரம் எதிர்த்து நின்று - இயேசு