இயேசுவே என்னிடம் பேசுவாயா
yesuvae ennidam pesuvaayaa
இயேசுவே என்னிடம் பேசுவாயா பேசினால் நான் வாழுவேன் தேடிடும் ஆயனே தேற்றுவாயா தாகத்தில் நான் வாடினேன் பேசுகின்ற தெய்வமானாய் பேசுமே இயேசுவே நான் வாழுவேன் ஆசையோடு காத்திருந்தேன் பேசுமே யேசுவே நான் கேட்கிறேன்
நீ பேசினால் ஒளி வந்தது நீ பேசினால் புயல் நின்றது நீ பேசினால் பயம் போனது நீ பேசினால் சுகமானது நீ பேசினால் என் நெஞ்சிலே கனமான சுமைகூட காற்றாகுமே நீ பேசினால் என் கண்ணிலே வடிகின்ற நீர் கூட சுகமாகுமே பேசுமே இயேசுவே நான் கேட்கிறேன் 2
நீ பேசினால் உயிர் வந்தது நீ பேசினால் பசி நின்றது நீ பேசினால் மனம் திறந்தது நீ பேசினால் பிணி தீர்ந்தது நீ பேசினால் என் வாழ்விலே குறைவான எல்லாமே நிறைவாகுமே நீ பேசினால் என் தெய்வமே அழியாமல் என் வாழ்வு நிலையாகுமே பேசுமே இயேசுவே நான் கேட்கிறேன்