யேசுவே என்னைப் படைக்கிறேன்
yesuvae ennaip padaikkiren
யேசுவே என்னைப் படைக்கிறேன் ஏற்று என்றும் நடத்திடுமே.
1. என் பாவம் கழுவி சத்திகரித்தீர் நான் நீதிமான் ஆனேன் (2) பாவமெல்லாம் பஞ்சைப்போல் ஆகவே வெண்மையாக மாற்றித் தந்தவரே. யேசுவே என்னைப் படைக்கிறேன் ஏற்று என்றும் நடத்திடுமே.
2. கல்லான என் நெஞ்சை நீர் உடைத்தீர் சதையான இதயம் பெற்றேன் (2) அழுக்கான கந்தை நீர் மாற்றினீர் நீதியின் வஸ்திரம் உடுத்துவித்தீர். யேசுவே என்னைப் படைக்கிறேன் ஏற்று என்றும் நடத்திடுமே.
3. கர்த்தரின் ஊழியம் நிறைவேற்றிட என்னையும் அர்ப்பணி;த்தேன் (2) பெலன் தந்து என்னையும் அபிஷேகியும் காருண்ய நாதரே என் யேசுவே. யேசுவே என்னைப் படைக்கிறேன் ஏற்று என்றும் நடத்திடுமே.