இயேசுவே என்தேவனே
yesuvae endhevanae
இயேசுவே என்தேவனே உம்மை தேடி அலைந்தேன் பாரினிலே என் உடல் சோர்ந்தாலுமே என் உள்ளம் உம்மை நாடுதே தடைகள் நேர்ந்தாலுமே என் தஞ்சம் நீர்தான்ஐயா --2
மாறாதவர் நீரே .. விட்டு விலகாதவர் நீரே.. நிலையான உம் அன்பை என்னில் தந்தவரே --2 ஏழையான என்னை நீர் நோக்கி பார்த்தீரே மாறாவின் என் வாழ்வை மதுரம் ஆக்கினீரே --2
பல்லவி
இயேசுவே.. என்தேவனே .. உம்மை தேடி அலைந்தேன் பாரினிலே --2
நீதி உள்ளவர் நீரே நீதி செய்பவர் நீரே உம்மையன்றி எனக்கு வேறு யாரும் இல்லையே --2 ஆறாத என் காயம் ஆற்றிணீர்ஐயா உம் இரக்கத்தாலே என்னை நீர் தேற்றிணீர்ஐயா --2
பல்லவி
இயேசுவே.. என்தேவனே .. உம்மை தேடி அலைந்தேன் பாரினிலே --2