இயேசுவே எந்தன் போஜனம்
yesuvae endhan pojanam
இயேசுவே எந்தன் போஜனம் இயேசுவே எந்தன் ஜீவ மன்னா இயேசுவே எந்தன் ஜீவ அப்பம் தாகத்தை தீர்த்திடும் ஜீவ நதி
1. பாவக் கொடுமையால் நாவறண்ட போது பார்த்து கசிந்து உள்ளம் நொறுங்கி – 2 கல்வாரி சிலுவையில் தன்னைப் பிழிந்தார் இரத்தத்தைப் பருக பானமாய் தந்தார் – இயேசுவே
2. தாயென்னை மறந்து தள்ளின போது தகப்பன் வெறுத்து பகைத்த போதும – 2; ஆணிகள் பாய்ந்த கரங்கள் கொண்டு ஆழாதே நானுண்டெனக் கண்ணீர் துடைத்தார்
3. உள்ளத்தின் வேதனை மிஞ்சிடும் நேரம் உண்மையாய் அணைக்கும் அன்பரின் கரம் பக்கமாய் நின்று தேற்றிடுவாரே பரிதபித்தன்பாய் வேண்டிடுவாரே – இயேசுவே
4. அன்புக்கு ஏங்கின அனாதை எனக்கு அன்பர் என் இயேசுவே எல்லாமு மானார் எனக்கும் நீதான் எல்லாமுமென்றார் தாயாய் தகப்பனாய் நண்பனாய் ஆனார்