இயேசுவே எந்தன்
yesuvae endhan
1. இயேசுவே! எந்தன் கிருபாசனபதியே கிருபை நிறை பூரணரே இரக்கம் பெற ஏற்ற சகாயம் செய்யும் உந்தன் கிருபையை அடைய நாடி வந்தேன்
ஜீவனிலும் பெரிதே கிருபை ஜீவனின் அதிபதியே ஜீவன் நான் உம்மிடம் ஆளுகை செய்யவே ஜீவ நாளெல்லாம் நடத்திடும் ஜெயமாய்
2. பாவியாய் பாழுலகினில் அலைந்த என்னை தேடி வந்தீர் உம் அன்பினாலே என் இதயமதை இரத்தத்தால் கழுவி உம் ஆவியால் நிறைத்தீர் கிருபையினால் - ஜீவ
3. மலைகள் விலகி புவி நிலை மாறும் “மாறிடாத என் கிருபை” என வாக்குரைத்த உம் திரு வார்த்தையில் வளர்ந்தென்றுமே நிலைப்பேன் கிருபையினால் - ஜீவ
4, வரைந்தீர் உந்தன் திரு சிந்தையில் எனக்காய் மறைந்திருந்த மா நோக்கமதை நிறைவேற்றவே இதோ சரணடைந்தேன் கறை திரையற்றோனாகுவேன் கிருபையினால் - ஜீவ
5. மன்னவா பாரில் உம்மைப் போல மாறிடவே நீதியில் உம் முகம் காணுவேன் சீயோன் ராஜனே உந்தன் மகிமையிலே சேவிப்பேன் நித்திய காலமாய் கிருபையினால் - ஜீவ