இயேசுவே எனக்கு என்று யாருமே இல்ல
yesuvae enakku endru yaarumae illa
இயேசுவே எனக்கு என்று யாருமே இல்ல உம்மை நம்பியே நானும் வாழ்கிறேன் உம்மைத் தேடியே ஒடி வருகிறேன் பாரும் இயேசுவே என்ன பாரும் இயேசுவே கையை புடிச்சுட்டு என்னை நடத்தும் இயேசுவே
கவலை என்னில் பெருகும் போது கலங்கி போகிறேன் வெளியில் சொல்ல முடியாமல் எனக்குள் அழுகிறேன் யாரும் இல்ல தேற்றிட யாரும் இல்ல உதவிட பாரும் இயேசுவே என்ன பாரும் இயேசுவே கையை புடிச்சுட்டு என்னை நடத்தும் இயேசுவே
உலகம் என்னை வெறுக்கும் போது உடைந்து போகிறேன் நம்பும் மனிதர் விலகும் போது நெஞ்சம் வலிக்குதே யாரும் இல்ல தேற்றிட யாரும் இல்ல உதவிட பாரும் இயேசுவே என்ன பாரும் இயேசுவே கையை புடிச்சுட்டு என்னை நடத்தும் இயேசுவே