இயேசுவே எனக்கிந்த
yesuvae enakkindha
1. இயேசுவே எனக்கிந்த இகமதிலே அசைந்திடாதோர் நம்பிக்கையே சார்ந்திடுவேனே மாறா வாக்கினிலே சாற்றுவோன் அவர் புகழை
நேசிக்க சிறந்தவரேசு எனக்கே ஆசைக்குகந்தவரே - இன்ப சாரோனின் ரோஜா அவரே
2. மரணமதின் கொடும் கரத்தினின்றே கருணையாலென்னை விடுத்தே அரவணைத்தவர் கரமே எனது சரணம் தரணியிலே - நேசி
3. பெருகுதே எந்தன் அகந்தனில் கிருபை சாகரமெனவே ஏற்றதொரு சமயம் சகாயமளித்திடும் உற்றதோர் கிருபையிதே - நேசி
4. ஜீவனிலும் பெரியவர் கிருபை சீயோனை போல் உயர்ந்தது வே தாழ்மையுள்ளோரை வாழ்விக்கும் கிருபை சூழ்ந்திடும் நிதமென்னையே - நேசி
5. பூரண கிருபை அளித்திடவே ஆரணர் இயேசு தோன்றிடுவான் சாலேமின் மீட்பின் பலனும் பெற்றிடும் நல் காலமும் விரைந்திடுதே - நேசி