இயேசுவே என் பிரியமே
yesuvae en piriyamae
இயேசுவே என் பிரியமே இயேசுவே என் இன்பமே அன்பினாலே என் இதயம் நிறைகின்றதே பாசத்தாலே என் இதயம் பொங்கிடவே
என் உள்ளம் தேடுதே அது உம்மை நாடுது -(2)
உலகத்தில் எத்தனையோ பாசங்கள் உண்டு உள்ளத்தில் எழும்புகின்ற ஏக்கங்கள் உண்டு ஆனாலும் நீரோ என் நேசரே -(2) என் உயிரே என் ஆத்துமா துணையுமானீரே என் உள்ளம் தேடுது அது உம்மை நாடுது
நல்லதாய் தோன்றுகின்ற வழிகளும் உண்டு நயமாய் பேசுகின்ற மனிதரும் உண்டு -(2) ஆனாலும் நீரோ என் நேசரே -(2) என் வழியும் உண்மையும் வாழ்வுமானீரே -(2) என் உள்ளம் தேடுது அது உம்மை நாடுது -(2)
இயேசு...... இயேசு இயேசுவே இயேசு எனக்கு பிரியமே என் உள்ளம் தேடுது அது உம்மை நாடுது -(2)