இயேசுவே என் நேசமுள்ள
yesuvae en nesamulla
இயேசுவே என் நேசமுள்ள ஆத்ம நேசரே என்னை ஷேமமாக வேகம் வந்து சேர்த்துக்கொள்வீரே ஆசையவரே எந்தன் ஆத்ம நாதனே
1. முட்களுள்ளே நிற்கும் லீலி புஷ்பம் போலவே இங்கு மூர்க்கர் என்னை உருக்கமின்றி நெருக்கினாலுமே அன்பரவரே இயேசு இன்பமாகுமே
3. இத்தரையில் இயேசு எனக்கினிய கிச்சிலி உலகில் புத்திரருள் உத்தமரே முழுதும் என்கலி புதுமையாகவே அவர் பிரபை வீசுதே
4. நேசமென்னும் கொடி எந்தன்மேல் பறக்குதே என்னை சேதமின்றி மீட்கவே என் அண்டை நிற்கிறார் ஓசை கேட்குதே என் ஆசை அதுவே
5. மரையின் குட்டி போலவே என் அரிய அன்பரே அவர் மலைகள்மேடு மீதிலேறி துள்ளி இன்பமாய் அலைந்திடா தென்னை அணைத்திடுகிறார்
6. மாரிக்காலம் சென்று மழை பெய்தொழியுதே மகா மாட்சியாக புஷ்பங்களின் காட்சி தோனுதே ஆட்சிகொள்ளுவேன் வந்து சேர்த்துக் கொள்ளுவார்