இயேசுவே என் நம்பிக்கை
yesuvae en nambikkai
இயேசுவே என் நம்பிக்கை - ஏகிடுவாரென் பக்கம் நாசமணுகாமலே - நேசமாய் நடத்துவார்
காசினி மீது எனக்கு - ஆசை வேறு இல்லையே - இயேசு
1. கடைசிபரியந்தமும் - கூடயிருப்பேனென்றார் அதை நான் நம்புவேன் - இடைவிடாமல் பதைக்காமல் நிற்பேன் - இயேசு
2. எந்தனின்பம் விரும்பி - துன்பந்துயருற்றாரே சொந்த ரத்தத்தைச் - சொரிந்து எந்தனைத் தம் சொந்தமாக்கினார் - இயேசு
3. கஷ்டம் என் மேல் வீழ்ந்தாலும் - துஷ்ட றெதிர் நின்றாலும் நஷ்டமடையும் - என் இரட்சகனின் கட்டியணைப்பார் - இயேசு
4. தேகம் மொத்த வருந்தி - சாகும் வேலை வந்தாலும் ஜெகத்தினுதவி - இகழ்ச்சி வந்தாலும் சோர்ந்திடமாட்டேன் - இயேசு
5. வேதனைகள் வந்தாலும் - சோதனைகள் சூழ்ந்தாலும் காதலன் இயேசு - பாதுகாத்தென்னை ஆதரிப்பாரா - இயேசு
6. துன்பம் துயர் வந்தாலும் - நண்பர் வழி நடப்பேன் அன்பரெந்தனை - இன்ப வீடதில் கொண்டு சேர்ப்பாரே - இயேசு