இயேசுவே ஏன் இந்த
yesuvae en indha
இயேசுவே ஏன் இந்த கோர பாடுகள் - ஈன சிலுவை மரத்தில் எனக்காகவோ எனக்காகவோ
1. எந்தன் பாவ சாபத்தை போக்கும் பலியாகவே இந்த பாடுகள் சகிக்க நினைந்தோ அந்தக் கேடடைந்தீர் சாந்த ரூபனே - இயேசு
2. நோய்கள் யாவும் தீர்க்கவே நேயா திருமேனியில் காயம் ஏற்றீரோ உன் ஜீவன் இந்திரா நாயகரே என்றும் நான் உன் சொந்தமே - இயேசு
3. சதா காலங்களாய் நான் ஜீவ தண்ணீரூற்றிலே தாகம் தீர்க்கவோ ஆனந்தங் கொள்ளவோ தாகமானேனென்றீர் சிலுவையிலே - இயேசு
4. பஸ்கா ஆட்டுக்குட்டி வாய் பாரில் இரத்தம் சிந்தியே யாவும் ஆயிற்றென்று ஜீவன் வைத்தீரே பரிசுத்தனாக மாற்ற என்னையே - இயேசு
5. நீதியால் நிறைந்து நான் சூரியனாக சோபிக்க நித்திய பிதாவே நீர் பாவமானதால் இந்த சூரியன் முகம் தான் மறைந்ததோ - இயேசு
6. நாதா நீர் சகித்த இப்பாடுகளை எண்ணியே நான் இடத்திலே உமக்கே செய்வேன் நான் இதோ என்னையே தத்தம் செய்கிறேன் - இயேசு