இயேசுவே தேவனின் நேசகுமாரன்
yesuvae devanin nesagumaaran
இயேசுவே தேவனின் நேசகுமாரன் பாசமும் அன்பும் உள்ளோர் பாதையும் சத்தியம் ஜீவனும் இவரே மாறிடா மீட்பரும் நீர்
அல்லேலூயா மகிமை வல்லவர் இயேசுவுக்கே மாந்தரில் மாறா அன்பு கொண்டாரே மகிபனுக்கே மகிமை
1. தேவனின் தூய நல் சாயல் இழந்தேன் கோபத்தின் பாத்திரரே தேடியே வந்து ஆக்கினை போக்கும் தேவாட்டுக் குட்டியிதோ
2. வந்தனரே தேவ சித்தமே செய்ய சொந்த சரீரத்திலே எந்தையே தூய தாழ்மையின் மேன்மை சிந்தையில் தரித்திடுவோம்
3. இன்பத்திலும் வரும் துன்பத்திலும் இம்மானுவேலன் இவர் உன்னத அன்பில் காத்திடுவாரே உகந்தவர் கரமதிலே
4. யாக்கோபின் தாரகையாய் உதித்தோங்கும யூத சிங்கம் இவரே தாவீதின் வேரில் கிளையாய் தோன்றுவார் இணையற்ற இரட்சகரே