இயேசுவானவர் வருகின்றாரே
yesuvaanavar varugindraarae
இயேசுவானவர் வருகின்றாரே இன்பப் பேரொலி வானில் கேட்கின்றதே
1.மேகமீதில் வருகின்றாரே ஏகமாய் தூதர்கள் சூழ்ந்திடவே மணவாட்டியாம் நம்மைச் சேர்த்திடவே - இப்போ மணவாளனாம் இயேசு வருகின்றாரே
2.நேசர் சித்தம் செய்தவரை நிச்சயம் அவரில் சேர்த்திடுவார் உண்மையாய் அவரின் விசுவாசியை - அன்று திண்ணமாய் நாமும் அறிந்திடுவோம்
3.தூங்குகின்ற விசுவாசியே தூக்கத்தினின்று எழும்பிடுவாய் விண்ணினில் எக்காளம் தொனித்திடவே- இப்போ வேகமாய் பறந்திட புறப்படுவோம்
4.தீவட்டிகள் அணைந்திடுதே தீவிரம் எண்ணெய் பெற்றிடுவீர் விழிப்புடனே நாம் காத்திருப்போம் - மண வாழ்வினில் அவருடன் மகிழ்ந்திடவே
5.சோர்ந்து போன அவர் ஜனமே சோராமல் புது பெலன் அடைந்திடுவோம் பூலோக கவலைகள் முற்றிலும் ஒழிந்தே - நாம் மேலோகம் சென்றிட புறப்படுவோம்
6.தொல்லைகளும் துன்பங்களும் தொலைந்திடும் நேரம் நெருங்கிடுதே மணவறை நேசர் மகிழச்செய்வார் - நம்மை மார்பினில் சேர்த்து அணைத்திடுவார்