இயேசுன்னை அழைக்கிறார்
yesunnai azhaikkiraar
இயேசுன்னை அழைக்கிறார் - இன்ப சத்தம் கேளாயோ? இன்னமும் தாமதமேன் இரட்சணிய நாளிதுவே
1. கல்வாரி குருசினிலே கள்வரின் மத்தியிலே குருதி சிந்தி கிரயமீந்தார் கர்த்தர் இயேசுந்தனுக்காய் - இயேசு
2. கிருபை வெளிப்பட்டது கிறிஸ்தேசு பிரசன்னத்தால் சுவிசேஷமே இந்ததுவே ஜீவனும் அழியாமையையும் - இயேசு
3. பாவ ஜீவியத்தை நீ போற்றிடுவாய் இன்னும் பரிகரிப்பார் பாவத்தையும் சாபம் மரணத்தையும் - இயேசு
4. மாநிலத்தின் இன்பங்கள் மாறிடுமே அழிந்தே மாய்ந்திடாதே வாஞ்சிப்பாயே மன்னவன் இயேசுவையே - இயேசு
5. ஆதரவில்லாதவர் அண்டினால் இயேசுவையே ஆனந்தமும் ஈந்திடுவார் அன்பர் சமாதானமும் - இயேசு
6. ஜீவாகமமதில் உம் நாமம் பதித்திடுவார் ஜீவ கிரீடம் தானளிப்பார். ஜீவனுடன் வாழவே - இயேசு