இயேசு வின் நேச முகம் ஏழை
yesu vin nesa mugam ezhai
இயேசு வின் நேச முகம் ஏழை கண்டெப்பு மகிழ்வேன் மோசமான இவ்வுலகில் ஆசை எனக்கவரே - இயேசு
பாரச் சுமையதினால் பாடுபடுவோரை மீட்க பரலோக இன்பம் விட்டுப் பாருலகிற் தேடி வந்த - இயேசு
மண்ணின் மனத்துயர் மாண்டு நான் மயங்குகையில் கண்ணின் மணி போல என்னை எண்ணி அணைத்த எந்தன்
துன்பம் துயரம் நீக்கி இன்பம் ஏழை எனக்களித்தார் நண்பர் நற்பாத மென்றும் நாடி என் நாட்கழிப்பேன் - இயேசு
இவ்வண்ணம் இவ்வுலகில் எண்ணிடவோ யாருமில்லை எண்ணவும் எப்பொழுதும் ஏழை எனக்கருளும் - இயேசு
என்று மடியார் உம்மை ஏகமாய்ச் சேர்ந்தேற்றிடவே அன்றன்று யாவருக்கும் அருளுமனுக்கிரகம் - இயேசு
இன்பமும் ஈசன் ஒளி வீசும் பிரகாசமுள்ள பொன் நகர் ஏகி மன்னன் மார்பில் மகிழ்ந்திடுவேன் - இயேசு