இயேசு உயிர்த்தெழுந்தார்
yesu uyirthezhundhaar
இயேசு உயிர்த்தெழுந்தார் இயேசுவில் நாம் மீட் படைத்தோம் உயிர்த்த இயேசு மரிப்பது இல்லை வேதாளம் பாதாளம் நடுநடுங்கும்
1. வானத்தில் தூதர்கள் பலமாய் இறங்கிட கல்லறையின் கற்கள் புரட்டி தள்ளப்பட உயிர்த்த இயேசு தரிசனமானார் உன்னதங்களிலே உயர்வடைந்தார் - இயேசு
2. இயேசுவின் மரணம் விழுங்கப்பட்டதது சாத்தானின் அதிகாரம் பறிக்கப்பட்டது துரைத்தனம், கர்த்தத்துவம் எல்லாவற்றின் மேலும் உயிர்த்த இயேசு உயர்த்தப்பட்டார் - இயேசு
3. இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்ததினால் ஆலய திரைச்சீலை இரண்டாய் கிழிந்தது ஆசாரிய முறைமையும் மாற்றப்பட்டது இயேசுவோ நித்திய ஆசிரியரானார் - இயேசு
4. இயேசுவே ஆதியும் முதற்பேறுமானவர் சபையாம் சரீரத்தின் தலையுமானார் இயேசுவுக்கு எல்லாம் நிறுத்தப்பட்டது உயிர்த்த இயேசுவில் வாழ்ந்து சுகிப்போம்