இயேசு உன்னை அழைக்கிறார் இன்ப தொனி
yesu unnai azhaikkiraar inba thoni
இயேசு உன்னை அழைக்கிறார் இன்ப தொனி பின் வாராயோ இன்னல் தீர்க்க வல்லவரை இன்று நீ நம்பிடுவாய்
1. வருந்தி பாரங்கள் சுமந்த நீ விரும்பி சிலுவை நோக்கியே பார் அருமை ஆண்டவர் உனக்காக சிறுமை அடைந்து உயிர் தந்தாரே – இயேசு
2. உன் கையில் நீ செய்த பாவத்திற்காய் தன் கையில் ஆணிகள் பாய்ந்திடவே முள் முடி சூடினார் உன் வினைக்காய் மன்னிப்பு இரட்சண்யம் உனக்களிப்பார் – இயேசு
3. மனந்திரும்பி மாறினாலோ மறுபிறப்பை நீ கண்டடைவாய் இயேசுவை உன் ஆத்ம இரட்சகராய் ஏற்றுக் கொள் கிடைக்கும் சமாதானமே
4. வல்லமை ஆண்டவர் இரத்தத்திலே வியாதியின் வேரும் கூரும் முறியும் கர்த்தரின் காயங்கள் தழும்புகள் சுத்தமாய் உன்னையும் குணமாக்கிடும் – இயேசு
5. சத்திய பரனே அழைக்கிறார் நித்திய ஜீவனை ஈந்திடுவார் இயேசு வாலாகாத தொன்றுமில்லை இப்போது உன் தேவை வேண்டிக் கொள்வாய்
Related songs
- அநாதி தேவன் உன் அடைக்கலமேanaadhi devan un adaikkalamaeSis. Saral Navoriji · Pazhaya Paadalgal
- அந்தோ கல்வாரியில் அருமை இரட்சகரேandho kalvaariyil arumai iratsagaraeSis. Saral Navoriji · Pazhaya Paadalgal
- அன்னை அன்பிலும் விலைannai anbilum vilaiSis. Saral Navoriji · FMPB (Friends Ministry Prayer Band)
- அழைக்கிறார் அழைக்கிறார் இதோazhaikkiraar azhaikkiraar idhoSis. Saral Navoriji · Pazhaya Paadalgal
- அழைத்தீரே இயேசுவேazhaitheerae yesuvaeSis. Saral Navoriji · Pazhaya Paadalgal
- ஆச்சர்யமே அதிசயமேaaccharyamae adhisayamaeSis. Saral Navoriji · FMPB (Friends Ministry Prayer Band)
- ஆனந்த கீதங்கள் எந்நாளும் பாடிaanandha geedhangal ennaalum paadiSis. Saral Navoriji
- ஆனந்தமாய் இன்பக் கானான் ஏகிடுவேன்aanandhamaay inbak kaanaan egiduvenSis. Saral Navoriji · Pazhaya Paadalgal