இயேசு உன் உள்ளத்தில் வாசம் செய்ய
yesu un ullathil vaasam seyya
இயேசு உன் உள்ளத்தில் வாசம் செய்ய ஆசையாய் கேட்கிறாரே மெய் சமாதானமா இன்றளிப்பார் ஐங்காயம் கொண்டவரே
1. பாவத்தின் இன்பங்களும் - உலகில் மாயையின் காட்சிகளும் அழிவில் உன்னை அழித்திடும் வேளை தோழனே எங்கு செல்வாய்?
2. தம்மண்டை வந்திடுவார் - நிச்சயம் கண்டடைவான் இரட்சையே ஆக்கினையெல்லாம் ஏற்றவர் மீதில் போக்கிட மரித்தாரே
3. மரணம் என்றுன்னையே - சந்திக்கும் தருணம் என் செய்குவாய் அண்டிடுவாயே மாண்டிடும் முன்னே ஆண்டவர் இயேசுவை
4. ரோகத்தால் வாடுவதேன் - அதனை தேகத்தில் சுமந்தாரே ஜீவனின் ஊற்றாய் வீற்றிட உன்னில் இவ்வேளை ஏற்றுக்கொள்வாய்
5. மரித்தெதெழுந்தவரின் - சாயல் தரித்ததில் வளர பரிசுத்தமும் அவர் நிறைவும் உரிமையாம் உனக்கே