இயேசு தானே பெத்தலையில்
yesu thaanae pethalaiyil
இயேசு தானே பெத்தலையில் வாசன் எனை மீட்க வந்த குருநாதன்
கனமேவு கானானின் வாசன் காட்டிடையர் வணங்கும் நேசன் - இயேசு
1. கருணாகரப் பரம தேவா காதல் கொடுத்திடவும் வா வா ஆதார முன்னை யன்றி யாரே ஆ! குடில் வந்த பவநாசா - இயேசு
2. கோடா கோடி தூதர்கள் போற்ற குவலயம் வந்தனீரோ கோனே" அவலன் அழிம்பழிக்கத் தானோ அன்பாலே தேடி வந்த தேனே - இயேசு
3. மங்கா உடு வழியில் மாக ஜோதிடர் பின்னாலே மன்னன் ஏரோது மனங்கலங்க மகிழ்ந்து உதித்த மனுவேலே - இயேசு
4. காதல் என் கொள்ளவும் தானோ காப்ரியேல் உரைத்த விண்கோனே நாதம் வானிலுரைக்கத் தேனோ வேதம் எனக்களித்த தேனே - இயேசு
5. மா சீயோன் மலை வாசம் மண மங்கையின் நேசம் என் ஆத்ம நேசர் தாகம் எந்நாளும் உள்ளத்தில் சோகம் - இயேசு