இயேசு ரட்சகர் சிலுவை
yesu ratsagar siluvai
இயேசு ரட்சகர் சிலுவை எனக்கென்றும் ஆறுதலளிக்கும் எந்தனை யெடுத்த பந்தனை ஜெயிக்க - 2
வருத்தத்தோடு பாரம் சுமப்போர் - வருவீரே என்றவருரைத்தார் - 2 வலிய பாவமோ கொடிய ரோகமோ - 2 வருவீர் தருவீர் இருதயமென்றுரைத்த
கடின இருதயம் மாறும் மனக்கவலை யாவுமே தீரும் - 2 கனவின் நினைவோ மனதி னெண்ணமோ - 2 கருவோ டறுப்பேன் முடிவோடென்றுரைத்த
மோசேயின் சர்ப்பத்தைப்போல குருசினிலே இயேசு உயர்ந்தார் - 2 ஜனத்தை இழுக்க பாவத்தை யெடுக்க - 2 இரட்சிப்பும் மீட்பும் தருவேனென்றுரைத்த
குத்தின சேவகனன்று குருதியும் ஜலத்தையும் கண்டு - 2 மரித்தா ரென்றுமே சாட்சியும் கூறினான் - 2 மனதில் தினமும் குருதியை நினைத்திட
அன்புள்ள எந்தன் நேசர் அவனியில் வந்துயிர்விடுக்க - 2 அடியேன் பாவமோ அத்தனின் சித்தமோ - 2 அன்பே இன்பே அல்லேலூயா பாடிடுவேன்