இயேசு ராஜனை எங்கள்
yesu raajanai engal
இயேசு ராஜனை எங்கள் தேவனை இயேசு ராஜனை எங்கள் தேவைன ஏற்றியே போற்றியே வாழ்த்தி பாடிடுவோம் - 2
1. சென்ற காலமெல்லாம் சுகமுடன் காத்தர் கருணையின் கரத்தினால் அரவணைத்தாரே பாதையில் வந்த நோய்களைத் தீர்த்ததால் உன்னத தேவனை ஸ்தோத்தரிப்போம்
2. காரிருள் போன்ற கஷ்டங்கள் வந்தும் பாரினில் எம்மை காத்துக் கொண்டாரே மாறிடாத வாக்குகள் அளித்தார் மன்னவன் இயேசுவை ஸ்தோத்தரிப்போம்
3. மரணத்தின் பயத்தால் நடுங்கின நம்மை மகிமையாய் விடுவித்து மகிழச் செய்தாரே அன்பின் தேவன் ராஜ்ஜியமதிலே நிலைக்கச் செய்தோரை ஸ்தோத்தரிப்போம்
4. நம்பினோரை என்றும் காத்திடும் தேவன் நன்மைகள் யாவும் அளித்திடுவாரே சத்திய பரன் நித்திய குருவை சந்ததம் துதித்து ஸ்தோத்தரிப்போம்
5. தேவனின் வேர்கொண்டு நிலைபெற்றோராகி விசுவாச வீரராய் திகழ்ந்திடுவோமே பூரணராக கடந்திடுவோம் நாம் புண்ணியர் இயேசுவை ஸ்தோத்தரிப்போம்