யேசு ராஜா வருவார் தூதரோடும் வருவார்
yesu raajaa varuvaar thoodharodum varuvaar
1. யேசு ராஜா வருவார் தூதரோடும் வருவார் பக்தரை மோட்சத்தில் சேர்த்திடவே நான் ஜோதியாய் அவர் முகம் கண்டிடுவேன் - பின்னும் ஜெய கெம்பீரங் கொண்டுள்ளம் பொங்கிடுமே.
2. மணவாளனோடு மணவாட்டியாம் சபை மங்களமாய்க் கவி சாற்றிடுமே - அப்போ மாட்சிமையோடு நாம் பாடிடுவோம் அவர் நேசத்தின் ஆழத்தை ருசித்திடுவோம்.
3. முத்திரையிட்ட சுத்தர்கள் வெள்ளை அங்கிதரித்து கர்த்தர் சமூகத்தில் நின்றிடுவார் - அதில் சேர்ந்திடுவேன் நானும் பாடிடுவேன் - அன்று பொற்க்ரீடமே தரித் தாடிடுவேன்.
4. காதலித்தேன் நான் காசினியில் இன்பம் விட்டு கர்த்த ரோடென்று முறவாடிவே - அங்கு கனக மணவறை ஜொலித்திடுமே - அப்போ கர்த்தராம் யேசுவில் சுகிப்போமே.
5. வானத்தில் எக்காளம் தொனித்திடும் சமயத்தில் சுத்தர்கள் யாவரும் பறந்திடுவார் - அப்போ அத்தனின் கலியாண விருந்ததிலே - நாமும் நித்தமும் அவரோடு ஆர்ப்பரிப்போம்.