இயேசு ராஜா உம்மையே நான்
yesu raajaa ummaiyae naan
இயேசு ராஜா உம்மையே நான் ஸ்தோத்தரிக்கிறேன்
1. யெகோவாவே உந்தன் ஆவி என்னில் உற்றிடும் காத்திருக்கும் யாவர் மேலும் ஆவியை ஊற்றும் - இயேசு
2. சகல மனிதன் மேல் ஆவியை ஊற்றும் ஆவியின் மேல் பசிதாகம் உண்டாக செய்திடும் - இயேசு
3. பரிசுத்தராக நானிருப்பதினாலே நீயும் பரிசுத்தமாக என்றுரைத்த வல்லவா - இயேசு
4. உன்னாலொன்றும் செய்ய ஏலாது என்று சொன்னவர் தேவா நீரே வந்து என்னை பரிசுத்தமாக்கும் - இயேசு
5. உந்தன் வாக்கை நம்பி இப்போ வந்து நிற்கிறேன் இப்ப நீரே வந்து என்னை பரிசுத்தமாக்கும் - இயேசு
6. கல்வாரியின் ஜீவ ஆறு ஓடுது இன்று ஊற்றாய் ஓடுதே இன்று எனக்காய் ஓடுதே அன்று - இயேசு
7. விசுவாசம் என்னிலே பெருகச் செய்திடும் மறை பொருட்கள் யாவையும் வெளிப்பட செய்திடும் - இயேசு
8. மறுரூப் ஆவி என்னில் வைத்திடும் சுவாமி என் மனதிலெல்லாம் சுத்தமான சிந்தையாக்கிடும் - இயேசு
9. குறைகளொன்றும் என்னிடத்தில் கண்டிடாதையா இதோ நாள் முழுவதும் என்னையே நான் உம்மில் வைக்கிறேன் - இயேசு