இயேசு ராஜா பிறந்திருக்கிறார்
yesu raajaa pirandhirukkiraar
இயேசு ராஜா பிறந்திருக்கிறார் எல்லோரும் கொண்டாடுவோம் கைதட்டி நாம் பாடுவோம்
கொண்டாடுவோம் கொண்டாடுவோம் இயேசு பிறந்ததைக் கொண்டாடுவோம்
கண்ணீரெல்லாம் துடைத்திடவே கருணை வேந்தன் உதித்தாரே உன்னதத்தில் தேவனுக்கே மகிமை உண்டாகட்டும்
வியாதிகளை போக்கிடவே வைத்தியராய் உதித்தாரே பூமியிலே சமாதானமும் மகிழ்ச்சியும் உண்டாகட்டும்
பாவமெல்லாம் போக்கிடவே பரிகாரி பிறந்தாரே தேவனுக்கும் மனிதருக்கும் ஐக்கியம் உண்டாகட்டும்
இயேசு என்னும் இரட்சகராம் இம்மானுவேலர் அவதரித்தார் கவலை இனி என்றும் இல்லைசங்கீதம் நாம் பாடுவோம்