இயேசு ராஜா எங்கள் நாதா
yesu raajaa engal naadhaa
இயேசு ராஜா எங்கள் நாதா இன்பமாம் சமுகம் தந்தீர் எங்கள் வாழ்வினில் ஒளி பிறக்கவே எஸ்தர் ஜெபமும் தந்தீர்- நீரே
1. மகிமை வல்லமை பரலோக மேன்மை மாதர் எம்மில் தங்கிட அக்கினி பிழம்பாய் ஆறுதல் மகளாய் அன்பினால் நிறைத்திடுமே - தெய்வ
2. ஒற்றுமை ஒருமனம் ஒளியின் பிரசன்னம் ஒவ்வொரு ஸ்திரீயின் வாழ்விலும் நிறைவாய் இறங்க நீதியின் சூரியன் நீர் நித்திய கிருபை புரிவீர் -உம்
3. விலையேறப்பெற்ற முத்தாய் விளங்கிட விடிவெள்ளி நட்சத்திரமாம் நீர் விந்தை ஒளிக்குள் வழிநடத்தி வீராங்கனையாய் மாற்றும் - ஜெப
4. நற்கனி நற்செய்கை நாளும் திகழ நாதன் இயேசு உம்மைப்போல் ஆவியின் அருளை அளவின்றி பெறவே அனுக்கிரகித் தாண்டருளும் - நீ