இயேசு போதுமே என்னை நேசிக்க
yesu podhumae ennai nesikka
இயேசு போதுமே என்னை நேசிக்க இயேசு ஒருவரே எந்தன் ரட்சகர் என் பாவங்கள் என் சாபங்கள் என் துரோகங்கள் மாற்றினார்
என் துக்கங்கள் என் துயரங்கள் என் துன்பங்கள் போக்கினார் இயேசு போதுமே என்னை நேசிக்க இயேசு ஒருவரே எந்தன் ரட்சகர்
1. துக்கம் துளைக்குதோ பெறும் துயரம் வாட்டுதோ நீ இயேசுவின் சேனையாய் எதற்கும் அஞ்சிடாதே
யுத்தத்தில் வல்லவர் கிருபைகள் நிறைந்தவர் சாவை வென்றவர் சர்வ வல்லவர் சகலமும் படைத்தவர் உன்னை இமைப்போல காப்பாரே
2. சோதனை கண்டுமே மனம் உடைந்து போனாயோ பெரும் சோதனையை சகித்தவர் என்றும் உன்னோடிருக்கிறார்
இயேசு பாதத்தை காத்திடு மீட்பர் இயேசுவே உந்தன் ரட்சகர் நம்பிடு பரிகாரி இயேசுவே – இதை மட்டும் உணர்ந்திடு