இயேசு பரனை எங்களின்
yesu paranai engalin
இயேசு பரனை எங்களின் ராஜணை ஏற்றி போற்றியே வாழ்த்திடுவோம்
இகபர சுகம் ஏழைகளுக்கு இலவசமாக அவதரித்தாரே - இயேசு
1. காசினியில் கரிசனையாய் வந்து கஷ்டத்தை சகித்தார் கர்த்தர் தாமே பாசமாக பாடுவோம் நாமே மேசியாவின் நாமத்தையே - இயேசு
2. மாண்டுபோன மாந்தரை மீட்க மகிலம் வந்து நம் மகிபனையே மாசில்லாமல் ஆசையோடு நேரில் நாம் மகிழ்ந்திடவே - இயேசு
3. மரண பயத்தால் நடுங்கின நம்மை மகிமையால் நிறுத்தும் மகிழச் செய்தார் சேவையே புரிவோம் இயேசுவின் நாமம் சிறந்து இலங்கிச் செழித்திடவே - இயேசு
4. தாசரை போல தாழ்மையை அணிந்து நேசரை நேயம் பின்பற்றுவோம் வேஷத்தை ஒழித்து வேதனையில் நிலைத்து வேதாளம் நடுங்கவே ஜெயித்திடுவோம் - இயேசு
5. தாவி வரும் பாவி ஒருபோதும் தள்ளாத ரட்சகன் ஜீவிப்பதால் தாமுதறேனோ பாவியே வாராய் தயாபரனண்டை சேர்ந்திடவே - இயேசு
6. மேக மீதினில் மேசியா வருவார் வேகமாய் நன்மை சேர்த்திடவே வேறு ரூபமாய் மாறுவோம் நாமே மேலோகத்திலென்றும் ஜீவிக்கவே - இயேசு