இயேசு ஒருவரே
yesu oruvarae
இயேசு ஒருவரே என் வாழ்வின் ஆதாரம் உம்மையன்றி யாரையண்டி பிழைக்கப் போகிறோம்
நிரந்தரமில்லா உலகமிது நிச்சயமில்லா வாழ்க்கையிது
1.வறண்டுபோன நிலம் போல் நான் வாடி நின்றேன் எனை வளமாக்க வந்தீரே மழையாகவே -2 வானம் பார்த்த பூமியைப் போல நாதா உம்மை பார்க்கன்றேன் -2
2.பட்டுப்போன மரம் போல் நான் முறிந்து போனேன் எனை வேரோடு இணைத்து நீர் உயிர்ப்பித்தீரே-2 செடி மேல் படரும் கொடியைப் போல நாதா உம்மை சார்ந்திருப்பேன் -2
3.தாயையிழந்த சேயைப்போல் தனியாய் நின்றேன் எனை தேடி வந்து மார்போடு அணைத்திட்டீரே -2 தாயின் மடியில் சேயைப் போல நாதா உம்மில் மகிழ்ந்திருப்பேன் -2