இயேசு ஓட வாழ்ந்தாக்க
yesu oda vaazhndhaakka
இயேசு ஓட வாழ்ந்தாக்க சந்தோஷம் தான் பாரு இயேசு ஓட நடந்தாக்க வாழ்க்கை எல்லாம் ஜோரு (2)
அவர் போல என்னையும் அன்பாக வச்சாரு அவர் போல நம்மையும் அன்பாக வச்சாரு ஆமா அது தானே நம்ம ஊழியம் (2)
வாழ்க அவர் நாமம் வாழ்க வாழ்க அவர் நாமம் வாழ்க (2)
1. ஆழத்துக்கு போ என்று சொன்னாரு ஆழத்துள்ள அற்புதத்த செஞ்சாரு காலியான படகு கூட நெரம்புச்சு தோல்வியான நம் வாழ்வு உயர்ந்துச்சு (2) – அவர்
2. பாத்திரத்தை நிரப்பு என்று சொன்னாரு கானா ஊரு தண்ணீர் கூட மாறுச்சு கண்மணி போல் காப்பேனு சொன்னாரு கண்ணுக்குள்ள நம்ம வச்சி காப்பாரு (2) – அவர்
3. சமுத்திரத்தின் மேல நடந்த கர்த்தரு கடைசி நேரம் வந்து கூட காப்பாரு சின்ன பையன் ரொட்டிய தான் கேட்டாரு ஆயிரம் ஆயிரமாய் செஞ்சாரு (2) – அவர்