யேசு நம்மை அழைக்கிறார்
yesu nammai azhaikkiraar
1. யேசு நம்மை அழைக்கிறார் துன்பம் லோகில் சூழ்கையில் அன்பு பொங்கி அழைக்கிறார் என்னைப் பின்செல் என்கிறார்.
2. மண் பொன் ஆசை மாய லோகில் மனதை மயக்கையில் மன்னன் யேசு நம்மை நோக்கி என்னை நேசி என்கிறார்.
3. இன்பம் துன்பம் லாபம் நஷ்டம் களிப்பு வேளையிலும் கிறிஸ்தவனே! என்னில் வெகு அன்புகூரு என்கிறார்.
4. யேசு நம்மை அழைக்கிறார் நேசர் சத்தம் கேளுமே பணிவுடன் இதயத்தைப் படைத்து அன்பாய் நேசி.